கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி கோவை மாநகர காவல்துறையுடன் இணைந்து மக்கள் புத்தகங்களை படிக்கும் பழக்கத்தினை அதிகரிக்கும் வகையில் ஆட்டோவில் நூலகம் என்ற திட்டத்தினை ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மேலும் பல ஆட்டோக்களுக்கு ஆட்டோ நூலகம் அமைக்கும் விழாவானது கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று (24ம் தேதி) காலை 10 மணியளவில் நடைபெற்றது.
இதில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு 500 க்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கு புத்தகங்கள் மற்றும் அதை வைக்கும் பெட்டிகளையும் வழங்கினார். ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் பயன்பெரும் வகையில் இந்த ஆட்டோவில் நூலகம் திட்டம் கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிகழ்வில் கல்லூரியின் துணைத்தலைவர் இந்து முருகேசன், முதன்மை நிர்வாக அதிகாரி மோகன் தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.