fbpx
Homeபிற செய்திகள்கோவையில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் துவக்கி வைத்தார்

கோவையில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் துவக்கி வைத்தார்

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் கோவை நேரு விளையாட்டு அரங்கில் இன்று காலை நடைபெற்றது. கோயம்புத்தூர் டி-எலைட் ரோட்டரி கிளப், வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தானை நடத்தியது. இதனை கோயம்புத்தூர் மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வி.எல்.பி.ஜானகியம்மாள் அறக்கட்டளையின் தலைவர் ந. சூர்யகுமார், தலைமை நிர்வாக அதிகாரி ஜெய் ஸ்ரீ சூர்யா குமார், கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் து.பிருந்தா. முதல்வர் த.கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டனர். மாரத்தானில் முதல் பதிப்பில் 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், இல்லத்தரசிகள், உடற்பயிற்சி ஆர்வலர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களுக்கு 3 கி.மீ ஓட்டம் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 5 கி.மீ திறந்த ஓட்டம் என இரண்டு பிரிவுகளில் மாரத்தான் நடைபெற்றது. மாரத்தானில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம், சிற்றுண்டி மற்றும் மின் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

படிக்க வேண்டும்

spot_img