fbpx
Homeபிற செய்திகள்பெரியநாயக்கன்பாளையம் தமிழ் சங்க இலக்கிய விழா

பெரியநாயக்கன்பாளையம் தமிழ் சங்க இலக்கிய விழா

பெரியநாயக்கன்பாளையம் தமிழ் சங்கத்தின் 90 வது திங்கள் இலக்கிய அமர்வு மற்றும் பாராட்டு விழா ஜோதிபுரத்தில் உள்ள டி.ஆர்.வி அகாடமியில் நடந்தது. ஆசிரியை அருணா தேவி, ராதாமணி ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.

ஆசிரியைகள் வீரலட்சுமி, ஜமுனா ராணி, மாணவிகள் பா புவனேஸ்வரி, செலினா ஜோஸ் ஆகியோர் குத்து விளக்கு ஒளி ஏற்றி தொடக்கி வைத்தனர்.
சங்கச் செயலாளர் தமிழாசிரியர் இரா.விவேகானந்தன் வரவேற்றார். அவைத் தலைவர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார்.

தொடர்ந்து சுவாமி விவேகானந்தர் காட்டும் வழியில் முன்னேறிச் செல்வோம், தமிழ் மொழியின் சிறப்பு ஆகிய தலைப்புகளில் மாணவிகள் புவனேஸ்வரி, செலினா ஜோஸ் ஆகியோர் பேசினர்.

சிறப்பு அழைப்பாளர்களாக துடியலூர் தமிழ்ச்சங்க நிறுவனர் க.பா.கலையரசன், சிபி ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் அரங்க கோபால் ஆகியோர் தாய் மொழியின் அவசியத்தையும், பயன்பாட்டின் முக்கியத்துவத்தையும் விளக்கினர்.

சவுரிபாளையம் சண்முகப்பிரியா மருத்துவமனையின் தலைவரும், கம்பன் கலைக்கூடத்தின் நிறுவனருமான மருத் துவர் கு. சுப்பிரமணியம் கம்பனின் பாடல்களை இசையோடு பாடி, ராமன் மறு சொல் இன்றி காடு சென்ற காட்சியை விவரித்தார்.

பின்னர் கவையன்புத்தூர் தமிழ்ச் சங்கச் செயலாளர் கணேசனுக்கு தமிழ்ச் சேவகன் விருது வழங்கப்பட்டது. புலவர் ராமலிங்கம், தமிழாசிரியர்ஆசிரியைகள் வீரலட்சுமி, மு.சுப்பிரமணியம், பொன்.கனகாசலம், உன்னிகிருஷ்ணன், பால தண்டாயுதபாணி, கந்தசாமி, அப்பர் சாமி, பொன்னுசாமி, சண்முகம், ராதா கிருஷ்ணன், முன்னாள் பேராசிரியர் வேலுச்சாமி, கண்ணன், வீரராசவில்லவன் கோதை, திவாகர் ஆகியோர் பாராட்டிப் பேசினர். தொடர்ந்து திருமூர்த்தி, கனகாசலம், ராதாமணி ஆகியோர் கவிதை வாசித்தனர்.

பின்னர் ந. கணேசனுக்கு “தமிழ்ச் சேவகன்” என்ற விருதை ஆரோக்கியசாமி, பாலதண்டாயுதம், கண்ணன், வீரலட்சுமி, ராதாமணி ஆகியோர் கூட்டாக வழங்கி, நினைவு பரிசாக நூல்களையும் வழங்கியதோடு, பொன்னாடை அணி வித்தும் பாராட்டினர்.

ந.கணேசன் ஏற்புரையாற்றினார். இறுதியில் சங்கத்தின் துணைச் செயலாளர் தமிழாசிரியர் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img