பெரியநாயக்கன் பாளையத்தில் கோவை மேட்டுப்பாளையம் சாலை யில் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த இணைப் புச் சாலையானது பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
கோவை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் பெரியநாயக்கன் பாளையத்தில் வித்யாலய மேட்டிலிருந்து வண்ணாங் கோவில் பிரிவு வரை ரூ.115 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுகிறது.கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வரும் இதன்கட்டுமானப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளன.
இப்பணிக்காக பெரிய நாயக்கன்பாளையம் பெரியபாலம் அருகில் மேட்டுப்பாளையம் செல் லும் சாலை அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் கோவையி லிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் பாலமலை சாலையில் திரும்பி கவுண்டம்பாளையம், சாமி செட்டிபாளையம் கிராமங்களின் வழியாக சென்று வந்தன.
தற்போது பண்டிகைக்காலம் என்பதால் பெரியநாயக்கன் பாளையம் நகருக்குள் உள்ள மற்ற சாலைகளில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.இதனால் வாகனங்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவு கிறது.
இப்பிரச்னையை தீர்க்க பெ.நா.பாளையம் பேரூராட்சி மன்றத் தலை வர் வெ.விஷ்வபிரகாஷ், பெரியநாயக்கன்பாளையம் பெரியபாலம் அருகில் உள்ள இணைப்புச் சாலையை திறந்து விட முயற்சி மேற்கொண்டார்.
இதற்கு கோவை மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததையடுத்து பெ.நா.பாளையம் துணைச் சரக டி.எஸ்.பி நமச் சிவாயம், பேரூராட்சி மன்றத் தலைவர் வெ.விஷ்வ பிர காஷ் முன்னிலையில் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் பொதுப் பயன் பாட்டிற்காக சாலையை திறந்து வைத்தார்.
காவல் ஆய்வாளர் தாமோதிரன்,பேரூராட்சிக் கவுன்சிலர்கள் உடனிருந் தனர்.
இனிமேல் கோவையிலி ருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கவுண்டம்பாளையத்தின் வழியாகச் செல்லாமல் பெரிய பாலம் வழியாக நேராகச் செல்லமுடியும்.இணைப்புச் சாலையை பொதுப் பயன்பாட்டிற்கு திறந்து வைத்ததற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.