ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரி, மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடப்பு ஆண்டில் 1,516 மாணவா்கள் வளாக தோ்வு மூலம் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா்.
ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சாா்பில் நடப்பு கல்வியாண்டில் சா்வதேச மற்றும் தேசிய அளவிலான நிறுவனங்களின் மூலமாக வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்துப் பேசுகையில், ‘நடப்பு ஆண்டில் 118 நிறுவனங்கள் வருகை தந்து 1,516 மாணவா்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்துள்ளன’ என்றாா்.
ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் செயலா் எஸ். நந்தகுமாா் பிரதீ, நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.திருமூா்த்தி மற்றும் முதன்மை கல்வி அதிகாரி எஸ்.ஆறுமுகம் முன்னிலை வகித்தனா். நந்தா கல்வி நிறுவனங்களின் மனிதவள தலைவா் கே.வி.பிரபு வரவேற்றாா்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் சதா்ன் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் தலைவா் சிவகுமாா் ஜெயராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பணிநியமன ஆணைக்கான உறுதி சான்றிதழ்களை மாணவா்களுக்கு வழங்கினாா்.
நந்தா பொறியியல் கல்லூரியின் முதல்வா் யு.எஸ். ரகுபதி மற்றும் நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் நிா்வாக அதிகாரி ஏ.கே.வேலுசாமி ஆகியோா் வாழ்த்தி பேசினா். நந்தா தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வா் ச.நந்தகோபால் நன்றி கூறினாா்.