புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. யூனியன் சேர்மன் வசுமதி அம்பாசங்கர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஹெலன் பொன்மணி,துணை சேர்மன் ஆஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் யூனியன் சேர்மன் வசுமதி அம்பா சங்கர் பேசுகையில், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் வடகிழக்கு பருவ மழையினால் கடந்த டிசம்பர் மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பாதிப்புகள் வெள்ள ஏற்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதியில் உடனடி யாக நடவடிக்கை மேற் கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலி ன் உத்தரவின்படி துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் அதிக அளவில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற 54 மோட்டார்கள் மற்றும் 21 ஜெனரேட்டர்கள் மற்றும் பைப்புகள் வாங்கி இடை விடாது தொடர் பணிகள் மேற்கொண்டு ஜே.சி.பி., டிராக்டர், ஜெனரேட்டர் டீசல் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு சுகாதார வசதிகள் ஒன் றிய பொது நிதியில் இருந்து ரூ.80 லட்சம் மதிப்பில் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.
மேலும் வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காத்திட களப்பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு போதுமான ஊதியம் அளித்து முறையான நடவ டிக்கை எடுக்கப் பட்டது என்றார்.
தொடர்ந்து 2023 -24ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் மாப்பிள்ளை யூரணி ஊராட்சி கோமாஸ்புரம் 2-வது தெருவில் சிமெண்ட் சாலை அமைத்தல், தளவாய்புரம் ஊராட்சி மேல தெருவில் பேவர் பிளாக் செயல்பட்டு விரைவாக சாலை அமைத்தல், சிம்மராஜபுரம் ஊராட்சி ரேஷன் கடை தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், கூட்டு டன்காடு ஊராட்சி, முடிவைத்தா னேந்தல் ஊராட்சி, சேர்வைக்காரன் மடம் ஊராட்சிகளில் பேவர் பிளாக் சாலை, தார் சாலைகள் அமைத்தல், பைப் லைன் விசாரணை செய்தல், மாப்பிள்ளை யூரணி ஊராட்சி காம ராஜர், நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிடம் மேம்பாடு உட்பட 41 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து அந்தோணி தனுஷ்பாலன் உட்பட கவுன்சிலர்கள் தங்கள் பகுதி தேவைகள் குறித்து பேசினர்.
கூட்டத்தில்” ஒன்றிய கவுன்சிலர்கள் சுதர்சன், ஆனந்தி, முத்துமாலை. தொம்மை சேவியர், ஜெய கணபதி, மரிய செல்வி, முத்துலட்சுமி, செல்வ பார்வதி, முத்துக்குமார், பொறியாளர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய மேலாளர், காசாளர், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.