fbpx
Homeபிற செய்திகள்பானாசோனிக் லைஃப் சொல்யூன்ஸ் இந்தியா புதிய ஏர் கண்டிஷனர்களை அறிமுகம்

பானாசோனிக் லைஃப் சொல்யூன்ஸ் இந்தியா புதிய ஏர் கண்டிஷனர்களை அறிமுகம்

பானாசோனிக் லைஃப் சொல்யூன்ஸ் இந்தியா (PLSIND) நிறுவனம், தமிழ்நாடு சந்தையில்  2024ம் ஆண்டின் புதிய ஏர் கண்டிஷனர்களின் வரிசையை அறிமுகப்படுத்தி உள்ளது. 

பரந்த அளவிலான 1.0, 1.5 மற்றும் 2.0-டன் மாடல்களில் 60 மாடல்களைக் கொண்டுள்ள இந்த சமீபத்திய ஏர் கண்டிஷனர்கள் இப்போது அனைத்து முக்கிய ரீடெயில் விற்பனை நிலையங்களில் கிடைக்கின்றன.

பானாசோனிக்கின் ஏர் கண்டிஷனர்கள் 45 அடி வரை காற்றை வீசக்கூடிய ஜெட் ஸ்ட்ரீம் காற்றோட்டத்துடன் வருகின்றன. உட்புற அலகு ஒரு பெரிய காற்று உட்கொள்ளல் மற்றும் விசிறி விட்டத்தைக் கொண்டுள்ளது. இது காற்றோட்டத்தை அதிகரிக்கிறது. கூடுதலாக, 4-வே ஸ்விங் கொண்ட தனித்துவமான இரட்டை மடல் ஏரோவிங்ஸ் வடிவமைப்பு லிவ்விங் ஸ்பேசின் ஒவ்வொரு மூலையையும் குளிர்விக்க உதவுகிறது.

நானோ தொழில்நுட்பத்துடன் கூடிய  புதுமையான தொழில்நுட்பம், காற்றில் உள்ள 99% உட்புற மாசுகளையும், பாக்டீரியா மற்றும் பிற கிருமித் துகள்களையும் அகற்றி உட்புறக் காற்றை வடிகட்டி சுத்தம் செய்திடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img