fbpx
Homeபிற செய்திகள்ஈரோட்டில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

ஈரோட்டில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

கிறிஸ்தவ மக்களின் தவக்காலத்தின் கடைசி ஞாயிறுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக அனுசரிக்கப்படுகிறது. தவக்காலம் என்பது சாம்பல் புதனில் தொடங்கி 40 நாட்கள் உபவாசம் கடைப்பிடிக்கப்பட்டு, கடைசி வாரம் பரிசுத்தவாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்த வகையில் இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்ப்பை கொண்டாடும் வாரமான இந்த பரிசுத்த வாரம், இயேசு கிறிஸ்து, ஒலிவ மலையில் இருந்து ஜெருசலேம் நகருக்குள் நுழையும்போது அவரை ஜெருசலேம் மக்கள் திரண்டு நின்று குருத்தோலைகளை கைகளில் ஏந்தி மகிழ்ச்சியுடன் வரவேற்கும் நாளான இந்த குருத்தோலை ஞாயிறுடன் தொடங்குகிறது.

அந்த வகையில், எதிர்வரும் பரிசுத்த வாரத்தில் பெரிய வியாழன், புனித வெள்ளி, அல்லேலூயா சனி மற்றும் உயிர்த்த ஞாயிறு என தவக்காலத்தின் முக்கியமான நாள்கள் உள்ளடங்குகின்றன.
இந்த குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு நேற்று காலையில், ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் அமைந்துள்ள புனித அமல அன்னை ஆலயம், சி.எஸ்.ஐ. தேவாலயத்தை சேர்ந்த திரளான கிறிஸ்தவ மக்கள் கைகளில் குருத்தோலை களை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

புனித அமல அன்னை ஆலயத்தை சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் அந்தோணியார் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, கால் நடை மருத்துவமனை வீதியில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தை அடைந்து அங்கு நடைபெற்ற சிறப்பு தியானத்தில் கலந்துகொண்டனர்.

இதேபோல சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ தேவாலய மக்கள் புனித அந்தோணியார் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு பிரப் ரோடு வழியாக சி.எஸ்.ஐ. தேவாலயத்தை அடைந்து சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.
இந்த குருத்தோலை ஞாயிறு பவனியில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img