fbpx
Homeபிற செய்திகள்நீலகிரியில் முழு உடல் தானம் விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் பங்கேற்பு

நீலகிரியில் முழு உடல் தானம் விழிப்புணர்வு பேரணி – கலெக்டர் பங்கேற்பு

நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கிராஸிலிருந்து, தன்னார்வ முழு உடல் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் நேற்று நடைபெற்றது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் உடற்கூறியியல் துறை சார்பில் தன்னார்வ முழு உடல்தானம் குறித்த விழிப்புணர்வு பேரணியானது, சேரிங் கிராஸிலிருந்து அரசு சேட் மருத்துவமனை வணிக வீதி மற்றும் அப்பர் பஜார் (Ooty Bazaar) வழியாக சென்றடைந்தது.

இந்த பேரணியின் நோக்கம் உடல் தானம் பற்றிய தவறான எண்ணங்களை அகற்றி, அதன் முக்கியத்துவத்தை பற்றிய சிறந்த புரிதலை வளர்ப்பதாகும். இந்த முன் முயற்சி தனி நபர்கள் அவர்கள் இறந்த பிறகு மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக தங்கள் உடல்களை தானம் செய்யும் விலைமதிப்பற்ற நோக்கத்தை ஊக்குவிப்பதாகும்.

முழு உடல்தானம் ஒரு உன்னதமான மற்றும் தன்னலமற்ற பங்களிப்பாகும். இது மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் மருத்துவ நடைமுறைகளை மேம்படுத்துவதிலும் மருத்துவத் தில் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளை மேற் கொள்வதிலும் மற்றும் எதிர்கால மருத்துவர்களை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த மருத்துவக் கல்லூரியின் உடல் தானம் செய்வதற்கான பிரிவிற்கு இந்து நகர் வளாகத்தில் உள்ள நிர்வாகத் துறையில் உள்ள கல்லூரி அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டது.
இப்பேரணியில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கீதாஞ்சலி, உடற்கூறியல் துறை தலைவர் மு.சாவித்திரி, மருத்துவர்கள், செவிலியர் கள் பலர் கலந்து கொண் டனர்.

படிக்க வேண்டும்

spot_img