ஊட்டி வந்த பஞ்சாப் சுற்றுலா பயணிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.69,400ஐ விசாரணைக்குப் பின் அவர்களிடமே தேர்தல் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இந்திய தேர்தல் ஆணையம் 19.04.2024 அன்று தேர்தல் நடைபெறுவதாக அறிவித்ததுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பறக்கும் படை குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த சுற்றுலா பயணிகளிடம் உரிய ஆவணம் இன்றி கொண்டுவந்த 69,400 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌஷிக் தலைமையிலான குழு இத்தொகைகான ஆவணங்களை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட பஞ்சாப் மாநிலத்தை சார்ந்த சுற்றுலா பயணிகளிடம் அவர்களின் தொகை 69,400ஐ உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் குன்னூர் வருவாய் கோட்டாட்சியருமான சதீஷ் மூலம் ஒப்படைக்கப்பட்டது.