நீலகிரி மாவட்டத்தில் ரூ.8.68 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட கூட்டுறவு தேயிலைத் தொழிற் சாலைகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர், உபாசி கூட்டரங்கத்தில் ரூ.8.68 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்பட்ட கரும்பாலம் மற்றும் மகாலிங்கா-2 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் கூறிய தாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், புதுமைப் பெண், நான் முதல்வன், விடியல் பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களின் வாழ்வா தாரத்திற்கு தேயிலையும், சுற்றுலாவும் தான் முக்கிய பங்காற்றுகிறது. இதனை நன்கு உணர்ந்த முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, அரசு தேயிலை தொழிற்சாலைகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல், கடந்த சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கையில் தேயிலை கிலோ 1க்கு ரூ.2 மானியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.
இதன் காரணமாக தேயிலை உற்பத்தி யாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் அவர் களுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில், தனியார் தேயிலை தொழிற் சாலைகள் அதிகளவில் உள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தேயிலை உற்பத்தியாளர்களுக்கு அதிக லாபம் ஈட்டும் வகையில் ஆரம்பிக்கப்பட்டது தான் இண்ட்கோசர்வ்.
எனவே, தேயிலை உற்பத்தியாளர்கள் தரமான தேயிலைகளை தொடர்ந்து தேயிலை தொழிற் சாலைகளுக்கு வழங்கி விற்பனை அதிகரிக்க செய்து, லாபத்துடன் தொடர்ந்து நடத்திட உறுதுணையாக நீங் கள் இருக்க வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து 1 லட்சத்து 35 ஆயிரம் டன் பசுந்தேயிலையை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து 35,324 டன் தேயிலை தயாரித்து ரூ.322 கோடியே 3 லட்சம் அளவிற்கு விற்பனை செய்துள்ளது.
இதுவரை தொழிற்சாலை களுக்கு பசுந்தேயிலை வழங் கிய 27 ஆயிரம் குறு, சிறு விவசாயிகளுக்கு தொழிற் சாலைகள் மூலம் ரூ.199 கோடியே 25 லட்சமும், இண்ட் கோசர்வ் மூலமாக ரூ.12 கோடியே 86 லட்சமும், அரசு மானியமாக ரூ.5 கோடியும் ஆக மொத்தம் ரூ.217 கோடியே 11 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சர் நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் தாயுள்ளதோடு, பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் கூடுதல் ஆதார விலையாக வழங்க ரூ.9 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்கள்.
இதன் மூலம் 27 ஆயிரம் குறு, சிறு தேயிலை விவசாயிகள் பயன் அடைவார்கள். நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 21/2 ஆண்டு காலத்தில் ரூ.11.22 கோடி மானியத்துடன் ரூ.44 கோடியே 2 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு 579 படித்த இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். எம் எஸ் எம் இ தொழில் நிறுவனங்களை ஊக்குவிப் பதற்காக அரசு 10 வகையான மானிய திட்டங்களை வழங்கி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 60 எம் எஸ் எம் இ நிறுவனங்களுக்கு ரூ.2.73 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தேயிலை விவசாயிகளின் சிரமம் அறிந்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வழங்கும் விவசாயிகள் தரமான தேயிலை வழங்க வேண்டும்.
போட்டிகள் நிறைந்த இந்த தேயிலை தொழிலில் குறைந்த விலையில் தரமான டீ தூள்களை தயாரித்து வழங்கினால் மட்டுமே, மக்களின் ஆதரவினை பெற முடியும். அதன் மூலம் விற்பனை அதிகரிக்க முடியும். நமது தொழிற்சாலைகளை லாபத்துடன் தொடர்ந்து நடத் திடவும் முடியும். ஆகவே தேயிலை விவசாயிகள் அரசின் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு சுற்று லாத்துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட நிதி உதவியுடன் பெறப்பட்ட 13 வாகனங்களை இண்ட்கோ தொழிற்சாலைகளுக்கு வழங்கும் பொருட்டு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்து, இண்ட்கோசர்வ் பற்றிய கார்ப்பரேட் வீடியோவினை வெளியிட்டார்கள்.
தொடர்ந்து சுற்றுலாத்துறை அமைச்சர் ஸ்ட்ரைவ் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப் பட்ட தொழில் பழகுநர்களுக்கு கையேடுகளை வழங்கி, சாலிஸ் பரி தொழிற்சாலைக்கு பேக்கிங் இயந்திரத்தினை வழங்கினார்.
முன்னதாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் முன்னிலையில், கேத்தி பேரூராட்சி, அல்லஞ்சி பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.24.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 180 குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சிகளில், இண்ட் கோசர்வ் கூடுதல் தலைமை செயலர் செயலாட் சியர் சுப்ரியா சாஹு, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அரசு செயலர் அர்ச் சனா பட்நாயக், மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா, தொழில் வணிகத்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரீன்டிக்கி பச்சாவ், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் நிர்மல்ராஜ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / சிறப்பு பகுதி மேம்பாட்டுத்திட்ட இயக்குநர் கௌசிக், இண்ட்கோசர்வ் பொது மேலாளர் சங்கரநாராய ணன், நபார்டு உதவி பொது மேலாளர் திருமலராவ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் / இணை இயக்குநர் (தேயிலை) சண்முக சிவா, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் சரவண குமார், குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் சதீஷ், குன்னூர் நகரமன்றத்தலைவர் (பொ) வசீம் ராஜா, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ராமசாமி, கேத்தி பேரூராட்சித்தலைவர் ஹேம மாலினி, அரசு அலுவலர்கள், சிறு தேயிலை விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.