நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் கேத்தி பேரூராட்சிகளில் ரூ.44.28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மற்றும் நடைபெற்று முடிந்த பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா செய்தியாளர் பயணத் தின்போது நேரில் பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி, பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் நகராட்சி, பேரூ ராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் மின்சாரம், சாலை உள்ளிட்டவைகளுக்கு முன்னுரிமை அளித்து செயல் படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்கள்.
அதனடிப்படையில், நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சியில் வளம்மீட்பு பூங்காக்களில் நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளை பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது.
மேலும், நமது மாவட்டத்தில் மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து மேலாண்மை செய்வதற்காக மாவட்டம் முழுவதும் திடக் கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்படி, கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட வார்டு களில் தூய்மை பணியாளர்கள் வீடு, வீடாக வாகனத்தில் சென்று மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை சேகரித்து வளம் மீட்பு பூங்கா மூலம் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மண்புழு உரம் தயாரிக்கும் பணிகளும் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள் குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு, அதிக மகசூல் காணப்பட்டு வருகிறது.
மேலும், கேத்தி பேரூ ராட்சிக்குட்பட்ட வளம் மீட்பு பூங்காவில் ‘தூய்மை இந்தியா திட் டத்தின் கீழ்”, ரூ.57 இலட்சத்தில் மேற்கூரையுடன் விட்ரோ பிளாட்பாரம் அமைக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், ரூ.19.50 இலட்சம் மதிப்பில் கூரை அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், கோத்தகிரி பேரூராட்சியில், அம்ருத் 2.0 திட்டத்தின்கீழ் ரூ.42.69 கோடி மதிப்பில் குடிநீர் தரைமட்ட நீர்தேக்க தொட்டி கட்டுமான பணிகள் மற்றும் குடிநீர் பணிகள் நடைபெற்று வருகிறது.
15வது நிதிக்குழு மானியத்திட்டத்தின்கீழ் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. மாநில நிதி பகிர்வு திட்டத்தின்கீழ் ரூ.77.80 இலட்சம் மதிப்பில் கேர்பெட்டா ஒசட்டி, காம்ராஜ் நகர் மற்றும் அலியூர் சாலை மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்மூலம் கோத்தகிரி பேரூராட்சியில் ரூ.43.52 கோடி மதிப்பிலும், கேத்தி பேரூராட்சியில் ரூ.76.50 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.44.28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மற்றும் நடைபெற்று முடிந்த பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் இன்று பார்வையிடப்பட்டு, பணிகளை விரைவாகவும், தரமா கவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, உதவி இயக்குநர்; (பேரூராட்சிகள்) இப்ராஹிம்ஷா, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், பேரூராட்சி செயல் அலுவலர்கள் (கேத்தி) நடராஜ், சதாசிவம் (பொ) (கோத்தகிரி), பேரூராட்சி தலைவர்கள் ஹேமமாலினி (கேத்தி), திருமதி.ஜெயக்குமாரி (கோத்தகிரி). உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.