fbpx
Homeபிற செய்திகள்வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை: - அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்

வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை: – அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்

நீலகிரி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வேலைவாய்ப்பு (ம) பயிற்சித் துறை, மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிர் திட் டம் சார்பில் மாபெரும் தனி யார்துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர்
திறன் திருவிழாவினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இன்று நடைபெற்ற இந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 112 வேலையளிக்கும் நிறுவனங்களும், 1,124 நபர்களும் கலந்து கொண்டனர்.
இதில் 228 ஆண்கள், 86 பெண்கள், மாற்றுத்திறனாளிகள் 3 என மொத்தம் 317 நபர்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும், 349 நபர்கள் இரண் டாம் கட்ட தேர்விற்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவ்விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில் சுற்றுலாத்து றை அமைச்சர் கூறுகையில்,
“ தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இதுவரை பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.8.65 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஏறத்தாழ 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வேலைவாய்ப்பு துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம் பாட்டு நிறுவனம் மூலமாக தனியார்துறை நிறுவனங்களில் வேலைநாடுநர்களை பணி யமர்த்துவதற்காகவும் மற்றும் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்குவதற் காகவும் இளைஞர் திறன் திருவிழாவுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திட அறிவுறுத்தியுள்ளார்கள்.

அதனடிப்படையில், நமது மாவட்டத்தில், கடந்த 07.12.2021 அன்று கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 33 நிறுவனங்கள் பங்குபெற்று அதில் கலந்து கொண்ட 1,040 வேலைநாடுநோர்களில் 265 நபர்களுக்கும், 12.05.2022 அன்று உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 165 நிறுவனங்கள் பங்குபெற்று அதில் கலந்து கொண்ட 5,912 வேலை நாடுநோர்களில் 1,279 நபர்க ளுக்கும் பணி நியமன ஆணை கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடத்தின் ஒரு பகுதியாக 25.07.2023 அன்று குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 125 நிறுவனங்கள் பங்குபெற்று, அதில் கலந்து கொண்ட 3,000 வேலைநாடுநோர்களில் 628 நபர்களுக்கும், 04.11.2023 உதகை அரசினர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 85 நிறுவனங்கள் பங்குபெற்று, அதில் கலந்து கொண்ட 1,370 வேலைநாடுநோர்களில் 361 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

இன்று 5வது வேலைவாய்ப்பு முகாமாக அரசினர் பாலி டெக்னிக் கல்லூரியில் நடை பெற்று வருகிறது. இதில், 112 நிறுவனங்கள் பங்குபெற்று, அதில் கலந்து கொண்ட 1,124 வேலைநாடுநோர்களில் 317 நபர்களுக்கும் உடனடியாக பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

பணி நியமன ஆணை பெற்றவர்கள் உடனடியாக பணியில் சேர்ந்து, நல்லமுறையில் பயிற்சி பெற்று, பிற்காலத்தில் தாங்களே ஒரு தொழில்முனைவோராக மாற இதுபோன்ற பயிற்சிகள் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு சார்பில் பல்வேறு திட்டங்களின் வாயிலாக தொழில் முனைவோர்களுக்கு கடனுதவிகள் வழங்கி வருகிறது. அதனை நீங்கள் தெரிந்து கொண்டு, சுய தொழில் துவங்கும் எண்ணமுள்ள நபர்களும் இது போன்ற திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு, தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இவ்விழாவில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாகுல் ஹமீது, உதகை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img