உதகையில் ஜெ.எஸ். எஸ் மருந்தாக்கியல் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த உலகளாவிய மருந்தாக்கியல் துறையில் உள்ள தடைகளை தவிர்ப்பது தொடர்பான மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கம் தொடங்கியது.
கல்லூரி விழா அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கை ஜெ.எஸ்.எஸ். பல்கல கழக இணை வேந்தர் முனைவர் பி.சுரேஷ், ஜெ.எஸ்.எஸ். பல்கலகழக துணைவேந்தர் டாக்டர் சுரேந்திர சிங், பிரபல கிரிகெட் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் , வேலூர் இன்ஸ் டிடியூட் ஆப் டெக்னாலஜி துணைத் தலைவர் டாக்டர் சேகர் விஸ்வநாதன், ஜெ.எஸ். எஸ். பல்கலைக்கழக பதிவாளர் மஞ்சுநாத், ஜெ.எஸ்.எஸ கல்லூரி முதல்வர் டாக்டர் தனபால் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்
ஜெ.எஸ்.எஸ். பல்கலைக் கழக இணைவேந்தர் முனைவர் பி.சுரேஷ் பேருரை யாற்றினார்
சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி துணைத் தலைவர் டாக்டர் சேகர் விஸ்வநாதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
JSSCP, ஊட்டி (ஜனவரி -டிசம்பர் 2023) இன் கான்ஃபெரன்ஸ் க்ரோனிக்கல் மற்றும் வெளியீடுகள் விழாவின் போது வெளியிடப்பட்டன. இறுதியாக கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் என்.கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.
உலகெங்கிலும் இருந்து வந்த 1350 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்றனர். அவற்றில் 460 ஆய்வு கருத்து சுருக்கங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
கருத்தரங்கில் சமீபத்திய ஆராய்ச்சி பணிகள் குறித்த கலந்துரையாடல்கள் பேருரைகள் கருத்துரைகள் நடைபெறுகின்றன.
இந்த சர்வதேச கருத்தரங்கம் 14 உலக நாடுகளின் ஆராய்சியாளர்கள், 10 தொழில் துறை நிறுவனங்கள், 53 கல்லூரிகள், 1350 ஆராய்சியாளர்களின் சங்கமமாய் நடைபெறுவது குறுப்பிடதக்கதாகும்
இந்த கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களைச்சார்ந்த மருந்தாக்கியல் துறை ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெறுவர் என தெரிவிக்கபட்டுஉள்ளது.