ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் உலக பொருள் வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் உலக சிறு தானிய ஆண்டு விழாவை முன்னிட்டு சிறுதானிய உணவு திருவிழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இந்த திருவிழாவில் கம்பு வரகு குதிரை வாழி கேழ்வரகு சாமை சோளம் திணை உட்பட பல்வேறு வகையான சிறு தானியங்களால் செய்யப்பட்ட உணவு வகைகள் வைக்கப்பட்டு இருந்தது அவருடன் அனைத்து துறைகளை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.