நீலகிரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் மு.அருணா நேற்று வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் கலெக் டர் அருணா பேசியதாவது:
இந்திய தேர்தல் ஆணைய அறிவுரையின் படி, 1-1-2024ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் 2024-இன் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி நீலகிரி மாவட் டத்தில் 2,74,497 ஆண் வாக்காளர்களும் 2,99,107 பெண் வாக்காளர்களும், 20 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். இதன்படி மாவட் டத்தில் மொத்தம் 5,73,624 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். பொதுமக்கள் இறுதி வாக்காளர் பட்டியலை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவல கம், வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி ஆணையர் அலுவலகங்களில் அனைத்து வேலை நாள்களிலும் பார்வையிடலாம்.
மேலும் திருத்தங்கள் இருப்பின் நேரிலும் அல்லது nvsp.in என்ற இணையதளம் மூலமும் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியல் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் மாவட்ட தகவல் மைய கட்டணமில்லா தொலை பேசி எண் 0423-1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கீர்த்தி பிரியதர்ஷினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்பிரியா, வருவாய் கோட்டாட்சியர்கள் முகமது குதரதுல்லா (கூடலூர்), மகராஜ் (உதகை), தேர்தல் வட் டாட்சியர் ஸ்ரீநிவாசன், அங்கீகரிக்கப்பட்ட அர சியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சித் துறை பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.