நீலகிரி மாவட்டம் தெங்குமர ஹாடா ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலை யத்திற்கு தெங்குமரஹாடா சித்திரம் பட்டி, கள்ளம்பாளையம், அல்லி, மாயார், புதுக்காடு, சுடுகாடு மூலை உள்ளிட்ட 800-க்கும் மேற் பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இவர்களுக்கு கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக உள்ளதால் அவ்வப்போது மின் பழுது ஏற்பட்டு வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது.
யுபிஎஸ்
இந்நிலையில் மின் பழுது ஏற்படும் போது பவானிசாகர் பகுதியில் இருந்து மின்வாரிய அதிகாரிகள் வந்து சீரமைத்த பின்பு மீண்டும் மின்சாரம் வரும் இதற்கு குறைந்த பட்சம் இரண்டு நாட்களாவது ஆகும். இதனிடையே இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க யுபிஎஸ் பொருத்த நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவிடம் கோரிக்கை வைத்தனர்
இதையடுத்து மேட்டுப்பாளையம் பகுதியில் வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா,அவருடைய சொந்த செலவில் ரூபாய் 50,000 மதிப்பில் இரண்டு யுபிஎஸ் பேட்டரிகளை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர் அருண் பிரசாத்திடம் வழங்கினார்.
கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பா.அருண்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் அஷரப் அலி, மாவட்ட அவைத்தலைவர் புருஷோத்தமன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஹக்கீம், அரசு வழக்கறிஞர் சிவ சுரேஷ், வழக்கறிஞர்கள் சந்தானம், சபிக், நகர இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.