நீலகிரி மாவட்டம், அதிகரட்டி பேரூராட்சியில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ.10.66 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளதாக சுற்று லாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட முட்டிநாடு கிராமத்தில் ரூ.98.70 லட்சம் மதிப்பில் 1.110 கி.மீ நீள சிமென்ட் சாலையை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பயன் பாட்டுக்கு திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மக ளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் சுமார் 1.16 லட்சம் மகளிர் பயன் பெற்று வருகின்றனர்.
‘புதுமைப் பெண்’ திட்டத்தின் மூலம் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், மகளிருக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்துக்கு 16 உள்ளூர் பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன் னிட்டு, அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டை தாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு நீளக் கரும்பு, ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
அதிகரட்டி பேரூராட்சியில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ.10.66 கோடி மதிப் பீட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கீர்த்தி பிரியதர்சினி, பேரூராட்சிகளின் உதவிப் பொறியாளர் மோகன் ராஜ், அதிகரட்டி
பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜ், பேரூராட்சி தலைவர் பேபிமுத்து, துணைத் தலைவர் செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.