குன்னூர் அருகே மேலூர் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 61 பயனாளிகளுக்கு ரூ.40.94 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் அருணா வழங்கினார்
நீலகிரி மாவட்டம், மேலூர் கிராம சமுதாய கூடத்தில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடை பெற்றது. மாவட்ட கலெக் டர் அருணா கலந்து கொண்டு தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் சுயதொழில் கடனுதவி பெறுவதற்கான ஆணை, மாவட்ட குழந் தைகள் பாதுகாப்புத் துறை சார்பில் நிதி ஆத ரவு திட்டத்தின் கீழ், 2 பயனாளிகளுக்கு ரூ.4 ஆயிரம் பெறுவதற்கான ஆணை, சமூக நலத்துறை சார்பில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத்
திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.1.50 லட்சத்துக்கான வைப்பு பத்திரங்கள், சிறுபான்மையின நல அலுவலகம் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 10,536 சார்பில் தையல் இயந்திரங்கள், தோட்டக் கலைத் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பில் வீரிய ஒட்டு ரக காய்கறி விதைகள், நுண்ணீர் பாசன திட்டம் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.41,648 மதிப்பிலான நலத்திட்ட உதவி உள்பட பல்வேறு துறைகள் சார் பில் மொத்தம் 61 பயனாளிகளுக்கு ரூ.40.94 லட்சம் மதிப்பில் அரசின் பல்வேறு நலத்திட்ட உத விகளை வழங்கினார்.
இம்முகாமில் கலெக்டர் அருணா பேசுகையில்,”தமிழ முதல்வரின் அறிவுறுத்த லின்படி, பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கே அரசு அலுவலர்கள் நேரடி யாக சென்று மனுநீதி நாள் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அதன்படி, மகளிருக்கு பேருந்து பயண சலுகை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி, புதுமைப் பெண் திட்டம் உள்பட பல்வேறு நலத் திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது” என்றார்.
அதைத் தொடர்ந்து முதலமைச்சர் கையொப்பமிட்ட பொங்கல் பண்டிகை வாழ்த்து மடலை 5500 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கும் நிகழ்வை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
முன்னதாக பல்வேறு அரசுத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கை கலெக்டர் அருணா பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் பால கணேஷ், குன்னூர் கோட்டாட்சியர் பூஷண குமார், தோட்டக்கலை இணை இயக்குநர் ஷபிலா மேரி, சுகாதார துணை இயக்குநர் மரு.பாலுசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மணிகண்டன், குன்னூர் ஊராட்சி ஒன்றியத் தலை வர் சுனிதா நேரு, மேலூர் ஊராட்சித் தலைவர் ரேணுகா தேவி உள்பட அரசுத் துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.