fbpx
Homeபிற செய்திகள்நீலகிரியில் ரூ.1.77 கோடி வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆய்வு

நீலகிரியில் ரூ.1.77 கோடி வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆய்வு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நெடுகுளா, கோடநாடு ஊராட்சி பகுதிகளில் ரூ.1.77 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மற்றும் நடைபெற்று முடிந்த பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் நெடு குளா ஊராட்சிக்குட்பட்ட ஈளாடா காந்திநகர் பகுதியில் ஊராட்சி பொது நிதியிலி ருந்து ரூ.6 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வரும் அங்கன்வாடி மைய
கட்டிடத்தினை பார்வையிட்டு மூன்று நாட்களுக்குள் பணிகளை முடித்து சுத்தம் செய்து அங்கன்வாடி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், கோடநாடு ஊராட்சிக்குட்பட்ட சுண்டட்டி கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வேளாண் கிடங்கினை பார்வையிட்டு 15 நாட் களுக்குள் முடித்து திறப்பதற்கு தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


ரூ.3.50 லட்சம் மதிப்பில் வீடு முதல் பொது விளையாட்டு மைதானம் வரை முடிக்கப்பட்ட கான்கிரீட் சிமெண்ட் சாலை பணியினையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வேளாண் கிடங்கு தடுப்புச் சுவர் கட்டும் பணியினையும், கோடநாடு ஊராட்சிக்குட்பட்ட வெற்றிநகர் பகுதியில் ராஷ்டிரிய கிராம சுராஜ் அபியான் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் நடைபெற்று முடிந்த ஊராட்சி ஒன்றிய பொது சேவை மைய கட்டிடத்தினையும், வெற்றிநகர் சங்கர் வீடு முதல் சீனிவாசன் வீடு வரை அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட கான்கிரீட் நடைபாதை மற்றும் தடுப்புச்சுவரினையும்
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் முத்தம்மாள் ஆறுமுகம் என்ற பயனாளிக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பில் நடை பெற்று வரும் வீடு கட்டும் பணியினையும் பார்வை யிட்டு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், மாவட்ட ஆட்சித் தலைவர் கோடநாடு ஊராட்சிக்குட்பட்ட பொன்னூர் பழங்கு டியினர் கிராமத்தில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து கேட்டறிந்தார். அப்போது அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் நடைபாதை மற்றும் ஒரு கால்வாய் அமைத்து தர கோரிக்கையினை முன் வைத்தனர். உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ஒரு கால்வாய் மற்றும் நடைபாதை பொது நிதியிலிருந்து அமைத்து தர அறிவுறுத்தினார்.


பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் கஸ்தூரிபா நகர் பகுதியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் செல்வமணி மற்றும் முருகேசன் என்ற பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமான பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் நிலம் சுத்தம் செய்யும் பணியினை, காக்காசோலை பகுதியில் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பயணியர் நிழற்குடை கட்டுமான பணியினையும், கேர்கொம்பை பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.29 லட்சம் மதிப்பில் நடைபெற்று முடிந்த கான்கிரீட் சிமெண்ட் சாலை பணியினையும், வ.உ.சி நகர் மற்றும் ஆடதொரை பகுதிகளில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் தலா ரூ.49.67 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வட்டார சுகாதார மையத்தின் கட்டுமான பணிகளையும், என மொத்தம் ரூ.1.77 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மற்றும் நடைபெற்று முடிந்த பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினார்.


அதனை தொடர்ந்து, ஈளாடா அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் இருப்பு மற்றும் குடிநீர் வசதி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார்.


முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் நெடுகுளா ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் அனிதா, உதவி பொறியாளர் ஜெயந்தி உட்பட பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img