fbpx
Homeபிற செய்திகள்கூடலூரில் வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு

கூடலூரில் வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் தேர்தல் தொடர் பான பொருட்கள் வைக்கப்பட்டதை மாவட்ட தேர்தல் அலுவலர் மு.அருணா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக பாராளுமன்ற பொதுத்தேர்தல் 19.04.2024 அன்று நடைபெறும் என அறிவித்ததை தொடர்ந்து, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 01.04.2024 அன்று முதல் வாக்காளர்க ளுக்கு வீடு, வீடாகச் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டுக்கள் வழங்கும் பணிகள் நடைபெற்றது.

இந்நிலையில் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கூடலூர் புனித தாமஸ் உயர்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் தேர்தல் தொடர்பான பொருட்கள் வைக்கப்பட்டதையும், அதே பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடியை யும் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான அருணா நேரில் பார் வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, வாக்குச்சாவடி மையமான கூடலூர் புனித தாமஸ்
உயர்நிலைப்பள்ளியில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள சாய்வு தளம், சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு, தன்னார்வலர்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிகழ்வுகளில் உதவி தேர்தல் அலுவலர் செந்தில்குமார் (கூடலூர்), வட்டாட்சியர்கள் கிருஷ் ணமூர்த்தி (பந்தலூர்), ராஜேஸ்வரி (கூடலூர்) உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img