நீலகிரி மாவட்டத்தில், பழமையான உதகை நகராட்சி மார்க்கெட் கடைகளை இடித்து பார்க்கிங் வசதிகளுடன் புதிய கடைகள் கட்டுவதற்காக நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட் சித்தலைவர் அருணா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரி உதகையில் பழமையான நகராட்சி மார்க்கெட் கடைகளை இடித்து பார்க்கிங் வசதிகளுடன் புதிய கடைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
உதகை நகராட்சி மார்க்கெட் புதிதாக கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு, தற்போது வரை 82 கடைகள்
இடிக்கப்பட்டு, தற்காலிகமாக ஏடிசி பகுதியில் அந்த கடைகள் செயல்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இந்த பகுதிகளில் 239 கடைகள் கட்டப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக 498 கடைகள் இடிக்கப்பட்டு, 501 கடைகள் கட்டப்படவுள்ளது.
கட்டிடத்தின் கீழ் பகுதியில் 126 இலகு ரக வாகனங்களும், 163 இரு சக்கர வாகனங்களும் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடமும், மேல் பகுதியில் கடைகளும் கட்டப்படவுள்ளது. இப்பணிகளை பார்வையிட்ட ஆட்சித் தலைவர் பணிகளை விரைந்து முடிக்குமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, உதகை நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், நகராட்சிப் பொறியாளர் சேகரன், உதவிப் பொறியாளர் சண்முகசுந்தரம் உட்பட பலர் உடனிருந்தனர்.