fbpx
Homeபிற செய்திகள்நீலகிரியில் 240 வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட சரிபார்க்கும் பணி

நீலகிரியில் 240 வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட சரிபார்க்கும் பணி

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, 19- நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு பயன்படுத்தப்படும் 240 வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட சீரற்ற மயமாக்கல் பணி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான அருணா தலைமையில், வேட்பாளர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

தொடர்ந்து, தேர்தல் தொடர்பான பணிகளும், வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளும் நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,16 வேட்பாளர்கள் 19-நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதால் கூடுதலாக 240 வாக்குப்பதிவு இயந்திரங்கள் (240 Ballot Units) ஈரோடு மாவட்டம், பெருந்துறை வாக்குப்பதிவு இயந்திர கிடங்கிலிருந்து எடுத்து வரப்பட்டு, மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்திலுள்ள வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

பின்னர், கடந்த 06.04.2024 அன்று பெல் நிறுவனத்தின் பொறியாளர்களால் முதல்நிலை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. 240 வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட சீரற்ற மயமாக்கல் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வேட்பாளர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், முதற்கட்ட சீரற்ற மயமாக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் வேட்பாளர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் / வருவாய் கோட்டாட்சியர்கள் மகராஜ் (உதகை), சதீஷ் (குன்னூர்), செந்தில்குமார் (கூடலூர்),
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுரேஷ் கண்ணன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பொறுப்பு அலுவலர் தமிழ்மணி, தேர்தல் வட்டாட்சியர் சீனிவாசன், அனைத்து வட்டாட்சியர்கள், வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img