fbpx
Homeதலையங்கம்ஆன்லைன் சூதாட்டம் ஒழிப்பதற்கு ஒரேவழி!

ஆன்லைன் சூதாட்டம் ஒழிப்பதற்கு ஒரேவழி!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனைத் தடுக்கும் நோக்குடன் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அதன் பயனாக தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் 2022-இல் மீண்டும் நிறைவேற்றப்பட்டும் கூட, திறமை சார்ந்த விளையாட்டுகளான ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்றவற்றை அந்த சட்டங்களின் மூலம் தடை செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் காரணமாக ஆன்லைன் சூதாட்டங்கள் மீண்டும் தழைத்து தமிழ்நாடு முழுவதும் அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிக்கத் தொடங்கியுள்ளன.

லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்கும் ஆன்லைன் ரம்மி போட்டித் தொடர்களை அறிவித்துள்ள ஒரு நிறுவனம், ஒட்டுமொத்தமாக ரூ.100 கோடி பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. இவ்வாறு ஆசை காட்டும் நிறுவனங்களின் வலைகளில் இளைஞர்கள் விழுவதை தடுக்க முடிவதில்லை.

ஆன்லைன் சூதாட்டங்களில் இருந்து இளைஞர்களை காப்பாற்ற வேண்டுமானால் உச்ச நீதிமன்றத்தில் தடை பெறுவதற்கான நடவடிக் கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை பெறுவது தான் இப்போதுள்ள ஒரே தீர்வு ஆகும்.

தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா?

படிக்க வேண்டும்

spot_img