fbpx
Homeபிற செய்திகள்மருதூர் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு? அதிகாரிகள் நேரில் ஆய்வு

மருதூர் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு? அதிகாரிகள் நேரில் ஆய்வு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மருதூர் ஊராட்சியில் 60 க்கும் மேற்பட்ட மேற்பட்ட கிராமங்கள் 12 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

தவறான ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு பணிக்கே வராத பலரும் இணைக்கப்பட்டு வேலை செய்ததாக தொகை பெற்றுள்ளதாக ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் உத்தரவின் பேரில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கமலக்கண்ணன் தலைமையிலான குழுவினர், மருதூர் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது இத்திட்டத்தில் வேலை செய்வோர் தொடர்பான, ஜாப் கார்டு குறித்து ஆய்வு மேற்கொண்டு, மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

நூறு நாள் வேலை திட்டத்தில் பங்கேற்ற தொழிலாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியதோடு ஆவணங்களை சரி பார்த்தனர்.
இது குறித்து ஆய்விற்கு வந்த அதிகாரிகளிடம் கேட்ட போது, “மூன்று நாட்கள் இந்த விசாரணை நடைபெறும். விசாரணை தொடர்பான அறிக்கை கலெக்டரிடம் ஒப்படைக்கப்படும்,” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img