Homeபிற செய்திகள்பஞ்சாலைகளில் பணிபுரியும் நிர்வாக மேலாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை

பஞ்சாலைகளில் பணிபுரியும் நிர்வாக மேலாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை

கேர் டி அமைப்பானது கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள தொழிலாளர் நலன், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் வளரி ளம் பெண்களின் கல்வி தொடர் பான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை 10 மணி முதல் மாலை வரை பஞ்சாலைகளில் பணியாற்றும் மனித வள மேலாளர்கள், மேற்பார் வையாளர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கு உள் புகார் குழு அமைப்பது, பொறுப்பான வணிக நடத்தைக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தக மற்றும் மனித உரிமைகள் பற்றி ஒரு நாள் பயிற்சி முகாம் ஹோட்டல் சி.ஏ.ஜி. பிரைடில் நடை பெற்றது.

இந்த பயிற்சி முகாமில் கேர் டி-யின் இயக்குநர் பிரிதிவிராஜ் பேசுகையில் சர்வதேச மனிதவள குறியீட்டின் அவசியம், நிலையான மனித வளம், உலக முதலீட்டாளர்களின் அவசியத்தில் உள்ள பஞ்சாலைத் தொழிலா ளர்களின் பங்கு, தமிழக அரசின் 1 டிரில்லியன் டாலர் இலக்கின் அவசியம் குறித்தும் பேசினார்.

அவரைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் ராஜபிரியா வெங்கட்ராமன் மற்றும் செல்வ காதம்பரி ஆகியோர் பேசுகையில் தொழிற்சாலைகளில் உள் புகார் குழு அமைப்பது அவசியம் குறித்தும், குழு அமைப்பது, குழு வழிகாட்டு நெறிமுறைகள், குற்றங்களை உள் புகார் குழு எப்படி பதிவு செய்வது, பாலியல் குற்றங்களுக்கான நீதிமன்றங்களின் கடுமையான சட்டங்கள் மற்றும் தண்டனைகள், தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் உள்ள குற்றங்களின் விவரங்கள் குறித்தும் கலந்துரையாடினார்கள்.

திருச்சி, பிப்த் வீல் டிரைவ், இயக்குநர் – பேராசிரியர் வெங்கடேசன் தங்கவேல் பேசுகையில் பொறுப்பான வணிக நடத்தைக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தக மற்றும் மனித உரிமைகளில் உள்ள ஒன்பது முக்கிய வணிக கொள்கைகளை பற்றி விரிவாக பேசினார்.

சிறந்த பஞ்சாலைகள் வளர்ச்சிக்காகவும், தொழிலாளர் நலனுக்கா கவும் கேர் டி செய்து வரும் பணிகள் குறித்து ஒருங்கிணைந்து மோத்தி ராஜ் மற்றும் அஸ்வதி பேசினார்கள். கருத்தரங்கின் நோக்கம் குறித்தும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் மெல்வின் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் 15க்கும் மேற்பட்ட பஞ்சாலைகளிலிருந்து 40 பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பஞ்சாலை ஒருங்கிணைப்பாளர் சிந்து அனைவரையும் வரவேற்று பேசினார்.
பொள்ளாச்சி வட்டார பணியாளர் பிரிஜா அனைவருக்கும் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img