ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் சிங்கப்பூர் பிரிவு 2வது வரு டாந்திர முன்னாள் மாணவர் சந்திப்பு நடைபெற்றது . சிங்கப்பூர் முன்னாள் மாணவர் சங்க பிரிவின் தலைவர் பத்மஸ்ரீசுப்ரமணியன் அவர்களின் வரவேற்பு உரையுடன் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது.
கல்லூரியின் பேராசி ரியர் மற்றும் வேதியியல் துறைத்தலைவர் டாக்டர். எல். ரகுநாத் கலந்து கொண்டு, கல்வி சகோதரத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, கல்லூரியின் வளர்ச்சி மற்றும் முன்னாள் மாணவர்களின் ஒருங்கிணைப்பின் முக்கியத் துவத்தை பற்றி விரிவுரை ஆற்றினார்.
சங்கத்தின் பொருளா ளர் பி.பெருமாள் மாணவர் சங்கம் ஆற்றிய பணிகளை விவரித்தார். முதல்வர் டாக்டர் என்.ஆர்.அலமேலு, முன்னாள் மாணவ சங்கத் தலைவர் வீணாரமேஷ் ஆகியோரின் வாழ்த்து செய்திகள் திரையிடப்பட்டன.
முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் 50 மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவியர்கள் குடும்பத்துடன் விழாவில் கலந்து கொண்டனர்.
மேலும் கலந்து கொண்ட மாணவர்கள், இப்போது கல்லூரியில் பயலும் மாணவ மாணவ வியர்க்கு ஆராய்ச்சி பற்றிய விழிப்புணர்வு மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கி வழிகாட்டிட முன் வந்தனர் . இறுதியில், சிங்கப்பூர் பிரிவுச் செயலாளர் ராம்குமார் பத்மநாபன் நன்றி கூறினார்.