கடலூர் மாவட்டம் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் புதிய நிதித்துறை இயக்குநராக பிரசன்னகுமார் ஆச்சார்யா பொறுப்பேற்றுள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிதித்துறை இயக்குநராக பணியாற்றி வந்த இவர், தற்போது என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நிதித்துறை இயக்குநராக சென்னையில் உள்ள மண்டல அலுவலகத்தில் கடந்த திங்கள் கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
பிரசன்னகுமார் ஆச்சார்யா ஏற்கெனவே என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நிதித்துறையில் வேறு ஒரு உயர் பொறுப்பில் பணியாற்றியவர் என்பது குறிப் பிடத்தக்கது.