fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி ஆட்சியர் அருணா வாக்குப்பதிவு

நீலகிரி ஆட்சியர் அருணா வாக்குப்பதிவு

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் உதகையில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான மு.அருணா வாக்குச்சாவடியில் முதல் வாக்கை பதிவு செய்தார்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட உதகை சட்டமன்ற தொகுதியில் காலை ஏழு மணி முதல் வாக்குப்பதிவு செய்ய வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் உதகையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான மு.அருணா முதல் வாக்கை பதிவு செய்தார்.

படிக்க வேண்டும்

spot_img