டெல்லி என்சிஆர் பகுதியில் அமைந்துள்ள நியூட்டன் ஸ்கூல் ஆப் டெக்னாலஜி நிறுவனம், ரிஷிஹூட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து 2024ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் நுழைவுத் தேர்வில் (என்எஸ்ஏடி – நியூட்டன் ஸ்கோ லாஸ்டிக் ஆப்டிடியூட் தேர்வு) பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பி.டெக் படிப்பில் கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பாடப் பிரிவுகளில் சேர்வதற்கு 2022-23ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்வில் 50 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். முதல் கட்டமாக விண்ணப்பித்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கிடைப்பதோடு இந்தக் கல்வி மையத்தில் சேர்வதும் உறுதி செய்யப்படுகிறது.
என்எஸ்ஏடி ஆன்லைன் தேர்வில் பெற்ற மதிப்பெண், நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண், ஜேஇஇ, சிபிஎஸ்இ, கேவிபிஒய், ஒலிம்பியாட் உள்ளிட்டவற்றில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் கல்விக் கட்டணத்தில் 100 % கல்வி உதவித் தொகை பெற முடியும்.
2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் நியூட்டன் ஸ்கூல் ஆப் டெக்னாலஜி கல்வி நிறு வனத்தில் பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
இம்மையம் சர்வதேச தரத்திலான கல்வியை அளிப்பதோடு மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா செல்லவும், கருத்தரங்குகளில் பங்கேற்கவும் வழி வகை செய்கிறது.
இக்கல்வி மையத்தை சித்தார்த், நிஷாந்த் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். இணை நிறுவனராக சித்தார்த் மகேஸ்வரி செயல்பட்டு வருகிறார்.