Homeபிற செய்திகள்தமிழ்நாடு முழுவதும் 2023ம் ஆண்டு 250 நேச்சுரோபதி யோகா கேந்திரா கிளினிக்குகளை உருவாக்க இலக்கு

தமிழ்நாடு முழுவதும் 2023ம் ஆண்டு 250 நேச்சுரோபதி யோகா கேந்திரா கிளினிக்குகளை உருவாக்க இலக்கு

நேச்சுராபதி யோகா கேந்திரா மாதிரி கிளினிக் திட்டத்தால், இளைஞர்களும், பெண்களும், மாற்றுத்திறனாளிகளும் வேலை வாய்ப்பு பெறும் வகையில் பாரதிதாசன் பல்கலைக் கழகம் தொழில் முனைவோருக்கான பயிற்சியும், ஆதரவினையும் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வழங்கி வருகின்றது.

இதற்கான முன்மாதிரி திட்ட வரைவு ஜனவரியில் சமர்ப்பிக்கப்படுகிறது. கோவையில் தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் கூட்டமைப்பு, வாய்ஸ் ஆப் சக்தி, சிவாஞ்சலி டிரஸ்ட் ஆகியவை இணைந்து புதிய நேச்சுராபதி திட்ட மையத்தை கோவையில் துவக்குகின்றன.

இதுகுறித்து புது டெல்லி, ஆயூஷ் இயற்கை யோகா கேந்திரா கிளினிக் தலைவர் மாண்புமிகு டாக்டர் சேவக் விஜய் கூறியதாவது :- மாற்றம் பெற்று வரும் கால நிலை, உலகளவில் ஏற்பட்டு வரும் பல்வேறு வகையான நோய்கள், மன அழுத்தம் போன்றவைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையிலான இயற்கை முறையிலான தீர்வுகளை தேடி வருகிறோம்.

இதற்கான கல்வி முறை, ஆராய்ச்சிகள், மருத்துவ சிகிச்சை முறை, யோகா போன்றவை அவசியமாகிறது. இதற்கென மக்கள் எளிதாக அணுகும் வகையில், நேச்சுராபதி யோகா கேந்திரா மாதிரி கிளினிக் திட்டம் உருவாக்கப்பட்டது.

2019 ம் ஆண்டில் கோவை, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடந்த ஆய்வரங்கில் இது, கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, முன்வடிவம் பெற்றது. மூன்று ஆண்டுகளாக பல்வேறு சாத்திய கூறுகளை ஆராய்ந்து ஆக்கபூர்வமான செயல் திட்டமாக மாற்றியுள்ளோம் மத்திய அரசின் சி சி ஆர் ஓய் யின் கண்காணிப்புடன், இந்திய இயற்கை மருத்துவர்கள் சங்கத்தின் ஆதரவுடன், தமிழ்நாட்டில் முன்மாதிரியாக செயல்படுத்த தொடங்கியுள்ளோம்.

இம் முறையானது, கல்வி மற்றும் தொழிற்சார்ந்த கூட்டமைப்புடன் இணைந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளையும், இந்திய மேலாண்மை நிறுவனத்தின் ஆலோசனைகளை பெற்று வளர்ச்சி பெற்றுவருகிறது. அடுத்த ஓராண் டில் தமிழ்நாடு முழுவதும் 250 நேச்சுரோபதி யோகா கேந்திரா கிளினிக்கை உருவாக்குவதை இலக்காக கொண்டுள்ளது.

அன்றாட வாழ்வில் மனிதனின் மன அழுத்தம், உடல்நல குறைவுகளை இயற்கை யான முறையிலான மருத்துவம், யோகா முறைகளால் நீக்கி நலமுடன் வாழ இது உதவுகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த முயற் சியால், பாரம்பரியமிக்க மருத்துவ முறைகளை பாதுகாப்பதுடன், இயற்கை சார்ந்த மருத்துவு பொருட்களை உற்பத்தி செய்யவும், ஒரு ஸ்டார்ட் அப் தொழிலாக மேற்கொள்ளவும், புதிய வேலை வாய்ப்புக்கும் வழி வகுக்கும்.

இந்திய இயற்கை மருத்துவர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் ஓராண்டில் 250 இயற்கை முறையிலான நல மருத்துவ கிளினிக்குகளை நாடு முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்ற இலக்கினை எட்டும்.

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தின் சமூகநலம், சமூக அறிவியல் பிரிவின் பேராசிரியர்கள், நேச்சுரோபதி யோகா கேந்திரா கிளினிக் வழியாக அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர். கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சார்ந்த இளைஞர்களுக்கு இயற்கை சார்ந்த மருந்துகள் மற்றும் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு உருவாக்கக்கூடிய அதற்கான ஆய் வினை அதற்கான துறை தலைவர் திரு. சுரேஷ் பாபு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார்.

மகளிர் சுய உதவிக்குழுக்களின் உதவி யோடு செயல்படுத்த திட்டவரைவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிளினிக் குகளை உருவாக்கி செயல்படுத்தவும், தரத்தை உயர்த்தவும், வல்லுனர்கள் குழு அமைத்து அரசின் அங்கீகாரமும் அனுமதியும் பெற உள்ளோம்.

மேலும், தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் கூட்டமைப்பு, வாய்ஸ் ஆப் சக்தி, சிவாஞ்சலி டிரஸ்ட் ஆகியவை இணைந்து புதிய நேச்சுராபதி திட்டத்தை கோவையில் துவக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது பாரதியார் பல்கலைக் கழகத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் இயக்குனர் பேராசிரியர் என்.ஆர் சுரேஷ்பாபு, சிவாஞ்சலி டிரஸ்ட் அறங்காவலர் உமாதேவி, வாய்ஸ் ஆப் சக்தி தேவி தலைவர் லட்சுமி மற்றும் பயிற்சியாளர் டாக்டர் சோனாலி சின்ஹா ஆகியோர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img