fbpx
Homeபிற செய்திகள்கோவை இயற்கை பாதுகாப்பு சங்கம் சார்பில் காலண்டர் வெளியிடும் நிகழ்ச்சி

கோவை இயற்கை பாதுகாப்பு சங்கம் சார்பில் காலண்டர் வெளியிடும் நிகழ்ச்சி

கோவை இயற்கை பாதுகாப்பு சங்கம் (என் சிஎஸ்) சார்பில் 2024-ம் ஆண்டுக்கான காலண்டர் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த காலண்டரில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படும் வன விலங்குகள், பறவை வகைகள், மாதத்தின் நாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும் வருடத்தில் முக்கியமான சுற்றுச்சூழல் தினங்கள், பறவைகள், வன உயிரினங்கள் புகைப்படம், அவை எடுக்கப்பட்ட இடங்கள் இடம்பெற்றுள்ளன.

டேபிள் காலண்டர், சுவரில் மாட்டும் காலண்டர் ஆகிய இரண்டு வகைகளில் காலண்டர் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் காணப்படும் வன உயிரின புகைப்படங்களை புகைப்பட கலைஞர் நித்யன் மணியரசு, ஜெ.அணாஸ் அகமது ஆகியோர் எடுத்துள்ளனர்.

புதிய காலண்டரை கோவை ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் மற்றும் கோவை மண்டல வனப் பாதுகாவலர் எஸ்.ராமசுப்ரமணியன் ஆகியோர் வெளியிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் இயற்கை பாதுகாப்பு சங்கத் தலைவர் ஐ.ஜலாலுதீன், ஐ.ஜெ.அஸ்கர் அகமது, பீட்டர் பிரேம் சக்கரவர்த்தி, வன விலங்கு உயிரியலாளர் என் சிஎஸ் உறுப்பினர்கள், வன அலுவலர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img