fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு வி.இ.டி கலை - அறிவியல் கல்லூரியில் இயற்கை பொருள் விற்பனை கண்காட்சி

ஈரோடு வி.இ.டி கலை – அறிவியல் கல்லூரியில் இயற்கை பொருள் விற்பனை கண்காட்சி

ஈரோடு வி.இ.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மண் மணம் இயற்கை சார் விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில் 40க்கும் மேற்பட்ட இயற்கை பொருள் அங்காடிகள் கண்காட்சி மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தன. மருத்துவ குணம் கொண்ட தாவர விதைகள், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருட்கள், அழகுசாதன பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், பருத்தி ஆடைகள் இதில் இடம்பெற்றன.

இயற்கை வேளாண்மை மற்றும் இயற்கை நல வாழ்வியல் குறித்த பயிலரங்குகளும், தகவல் மையங்களும், கண்காட்சிகளும் நடந்தன.
விழாவில் சிறப்பு விருந்தினராக ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பங்கேற்றார். இயற்கை உழவர் சுந்தரராமன், வேளாளர் கல்வி அறக்கட்டளை தலைவர் ஜெயகுமார், வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் நல்லசாமி, நிர்வாக அலுவலர் லோகேஸ் குமார் பங்கேற்றார்.

இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கும் செல்லமுத்து, சவுமியா, பிரியா ராஜ்நாராயணன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

ஜனனி ரீஜென் நிறுவனர் மற்றும் மைய செயல் அலுவலர் உஷாதேவி வாழ்த்துரை வழங்கினார். வேளாளர் கல்வி அறக்கட்டளை இணைசெயலாளர் நல்லசாமி, துணைத்தலைவர் திரு. ரத்தினசாமி, இணைசெயலாளர் ராஜமாணிக்கம், செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் இயற்கை விவசாயிகள், இயற்கை வேளாண்மை ஆர்வலர்கள், இயற்கை வாழ்முறை பொதுமக்கள் என 2,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img