கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள யுனைடெட் மருந்தியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த கருத்தரங்கானது மருந்து வேதியல் துறையின் புதிய அணுகுமுறை என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர் முனைவர் கவிமணி, பேராசிரியர் சுரேஷ், முதுநிலை பேராசிரியர் சிதம்பரம் மருத்துவர் கௌதம ராஜன், ஜே எஸ் எஸ் பார்மசி கல்லூரி ஸ்ரீராம், பேராசிரியர் மற்றும் துறை தலைவர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பார்மசி கல்லூரி கோவை ஆகிய துறை வல்லுனர்கள் பங்கேற்று நமது வயது மற்றும் உடலின் எடைக்கேற்ப மருந்துகளை உட்கொண்டு மருந்துகளின் வீரியத்தை குறைப்பதன் மூலம் விலையில் மாற்றங்களையும் கொண்டு வரலாம் என்று இந்த கருத்தரங்கில் விவாதித்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பார்மசி கல்லூரிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட பார்மசி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் யுனைடெட் பார்மசி கல்லூரியின் முதல்வர் முனைவர் அழகர்ராஜா செய்துள்ளார்.