கோவை சரவணம் பட்டி அருகே “கிரிக்கெட் கனவுகள், வரம்பற்ற உற்சாகம்” என்ற கருப் பொருளில், கோவை ரோட்டராக்ட் கிளப் கேலக்ஸி நடத்திய தேசிய அளவிலான இந்திய பாரா கிரிக்கெட் லீக் (ஐபிசிஎல்) 2.0 மூன்று நாள் போட் டிகளின் நிறைவு விழாவும் அதைதொடர்ந்து பரி சளிப்பு விழாவும் சரவ ணம்பட்டியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டிகளில் ஜம்மு அண்ட் காஷ்மீர், உத்தரப்பிரதேசம், புது தில்லி, ராஜஸ்தான், குஜ ராத், மகாராஷ்டிரம், தெலுங்கானா, ஆந்திரம், ஜார்கண்ட், தமிழ்நாடு உள் ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்றனர்.
விழாவில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றியாளர் களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி விளையாட்டு வீரர் களின் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் பாராட்டிப் பேசினார்.
விழாவில் ஐஎஃப்சிஆர் தலைவர் ஸ்ரீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் மும்பை ரோட்டரி டவுன் டவுன் டைகர்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா தண்டர் வாரியார் அணி விளையாடியது. முத லில் பேட்டிங் செய்த கொல் கத்தா தண்டர் வாரியார் அணி 94/8 ரன் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய மும்பை ரோட்டரி டவுன்டவுன் டைகர்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் 95/4 ரன் எடுத்தது வெற்றி பெற்றது. ஸ்கோர் – மும்பை ரோட்டரி டவுன்டவுன் டைகர்ஸ் அணியின் வீரர் சன்மார்கர் 57 ரன்கள் எடுத்தார். குணசேகரன் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
சிறந்த பேட்ஸ்மேனாக மும்பை ரோட்டரி டவுன் டவுன் டைகர்ஸ், அணியின் வீரர் சன்மேக்கர் தேர்வு செய்யப்பட்டார்.
சிறந்த பந்து வீச்சாள ராக கொல்கத்தா தண்டர் வாரியர்ஸ் அணியின் வீரர் கோபிநாத் தேர்வு செய்யப் பட்டார்.
தொடர் நாயகனாக சென்னை சூப்பர் கிரீன்ஸ் அணியின் வீரர் ரமேஷ் நாயுடு தேர்வு செய்யப்பட் டார்.மிமுன் அன்சாரி வலியுறுத்தினார்.



