fbpx
Homeபிற செய்திகள்ஆன்லைன் செயலி நிறுவனத்திற்கு ஆதரவாக கோவையில் குவியும் பொதுமக்கள்

ஆன்லைன் செயலி நிறுவனத்திற்கு ஆதரவாக கோவையில் குவியும் பொதுமக்கள்

MYV3Ads நிறுவனத்தின் மீது பொய் வழக்கு பதிவு செய்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயி ரக்கணக்கான மக்கள் கோவை எல் அண்ட் டி பைபாஸ் பகுதியில் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

MYV3Ads என்ற ஆன்லைன் செயலி நிறுவனத்தினர் பொது மக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் முதலீ டுகளைப் பெற்று மோசடி செய்வதாக கொடுக் கப்பட்ட புகாரை அடுத்து அந்த நிறுவனத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கு அந்த நிறுவனத்தின் மூலம் மாதந்தோறும் நிலையான வருவாய் பெரும் மக்களும், நிறுவனத் தரப்பும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக முதலீட்டா ளர்கள் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க திட்டமிடப்பட்டது.

ஆனால், 50 லட்சம் மக்கள் முதலீடு செய் துள்ள நிலையில் அதிக அளவில் மக்கள் கூடு வார்கள் என்பதை உணர்ந்த MYV3Ads நிறுவனத்தார் தங்கள் முதலீட்டாளர்களைக் கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் திரள அறிவுறுத்தினர்.

அதன்படி இன்று காலை முதல் பைபாஸ் சாலையில் மக்கள் தொடர்ந்து குவிந்தவண் ணம் உள்ளனர். லட்சக் கணக்கானோர் முதலீடு செய்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் பேருந்துகள் மூலமாக கோவைக்கு வருவதால் அங்கு அதிக அளவில் மக்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பவ இடத்தில் போலீசாரும் குவிக்கப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து முதலீட்டாளர்கள் கூறுகையில், “இது எங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் நிறுவனம்.

எங்கள் வாழ்வாதாரத்தை முடக்கும் நோக்கில் முகாந்திரம் இல்லாமல் பொய்யாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இங்கு கூடியுள்ளோம்“ என்றனர்.

சில தனி நபர்கள் விளம்பர ஆதாயத்திற்காக இப்படி பொய் புகாரை கொடுத்திருப்பதாகவும், இதனால் முதலீட்டாளர்கள் கொதிப்படைந்து திரண்டுள்ளதாகவும் MYV3Ads நிறுவனம் தெரிவித்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img