fbpx
Homeபிற செய்திகள்993 சுய உதவிக்குழுகளுக்கு ரூ.81.5 கோடி கடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்

993 சுய உதவிக்குழுகளுக்கு ரூ.81.5 கோடி கடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,ஈரோடு மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.

இதையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தனியார் பள்ளி அரங்கில் நடைபெற்ற விழாவில் 993 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.81½ கோடி மதிப்பிலான கடன் உதவி களை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவிக்கான காசோலையை வழங்கினார்.

உடன் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண் தம்புராஜ், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.இராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, மாநகராட்சி துணை மேயர் பா.தாமரைச்செல்வன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img