Homeபிற செய்திகள்மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 1,327 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 1,327 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் – அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று  சென்னை கலைவாணர் அரங்கில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இதை தொடர்ந்து, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ்  தலைமையில், திருப்பூர் மாவட்டம், காங்கயம் ஸ்ரீ மஹாராஜா மஹாலில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளின் சார்பில் 1,327 பயனாளிகளுக்கு ரூ.6.79 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் அமைச்சர் , கூறுகையில்,

“தமிழ்நாடு முதலமைச்சர்  தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். எந்தவொரு திட்டமானலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை உடனடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முழுக்கவனம் எடுத்து அரசு செயல்பட்டு வருகிறது.

அந்த  ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 18.12.2023  அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் துவக்கி வைக்கப்பட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு  பரிசீலிக்கப்பட்டு இன்றைய தினம் , மக்களுடன் முதல்வர்  திட்டத்தின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியை சென்னை கலைவாணர் அரங்கில்  தமிழ்நாடு முதலமைச்சர்  நலத்திட்ட உதவிகள் வழங்கி துவக்கி வைத்துள்ளார்கள். 

இதைத்தொடர்ந்து,  இந்த சிறப்பு வாய்ந்த திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்  வழங்கப்படுகிறது. 

மேலும் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உடனுக்குடன் அதை தீர்வு காண வேண்டும். அதிகபட்சம் 30 நாட்களுக்குள் அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணத்தையும் சொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கின்றார்கள்” என்றார்.

மொத்தம் 1,327 பயனாளிகளுக்கு ரூ.6.79 கோடி மதிப்பீட்டில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நலத்திட்ட உதவிகள்  வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்,  திருப்பூர் சார் ஆட்சியர் செல்வி சௌம்யா ஆனந்த் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, வருவாய் கோட்டாட்சியர்கள் செந்தில் அரசன் (தாராபுரம்),  ஜஸ்வந்த் கண்ணன் (உடுமலைப்பேட்டை), இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவர் புஷ்பாதேவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குமாரராஜா, பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) ராமலிங்கம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த் ராம்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img