fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பிரச்சாரம்

ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பிரச்சாரம்

ஈரோடு திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் காங்கேயம் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் எனும் பெயரில் திராவிட மாடல் அரசு கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

குறிப்பாக கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டம், பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், பெண்கள் முன்னேற்றத்துக்கான அடித்தளமாக பெண் கல்விக்கு முக்கியத் துவம் கொடுக்கும் புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டம், இல்லம் தேடிக்கல்வி, பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் என மக்கள் பல்வேறு மக்கள நலத்திட்டங்களை நமது முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

தவிர, கலைஞர் நூற்றாண்டு நூலகம், பன்னோக்கு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அவர் செயல்படுத்தியுள்ளார். எனவே, ஒன்றிய அரசின் பெட்ரோல், கேஸ் மற்றும் சுங்கச்சாவடி கொள்ளைகளில் இருந்து மக்களை விடுவித்திட, ஒன்றியத்தில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திட இந்தியா கூட்டணி சார்பில் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பிரகாஷை வெற்றிபெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img