fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் 5 புதிய மின் மாற்றிகள் அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

தூத்துக்குடியில் 5 புதிய மின் மாற்றிகள் அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தூத்துக்குடி பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் அறிவுறுத்துதலின்படி செயற்பொறியாளர் நகர் தூத்துக்குடி சின்னத்துரை வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி சிதம்பரநகர் மற்றும் சிப்காட் தூத்துக்குடி பிரிவிற்குட்பட்ட பகுதிகளான கணேஷ் நகர், என்ஜிஆ காலனி 2வது தெரு மேற்கு, கிரேஷ் நகர், வள்ளிநாயகபுரம் மற்றும் சக்தி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 266 மின் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் சுமார் ரூ.28.90- லட்சம் மதிப்பீட்டில் 5 புதிய 63 கே.வி.ஏ மின் மாற்றிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், செயற்பொறியாளர் சின்னத்துரை, உதவி செயற்பொறியாளர் உமையொருபாகம், உதவி பொறியாளர் முருகப்பெருமாள், ஆக்க முகவர்கள், மின்பாதை ஆய்வாளர்கள், கம்பியாளர்கள், மாமன்ற உறுப்பினர் ராஜேந்திரன். ராமகிருஷ்ணன் ‘ சரவணன்’ வைதேகி .ஜெயசீலி களப்பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img