fbpx
Homeபிற செய்திகள்2 ஆயிரம் மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் அமைச்சர் முத்துசாமி வழங்கினார்

2 ஆயிரம் மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் அமைச்சர் முத்துசாமி வழங்கினார்

மறைந்த முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு சூரியம்பாளையம், வீரப்பன்சத்திரம் பகுதியில் சுமார் 2000 பள்ளி மாணவர் களுக்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி நோட்டு புத்தகங்களை வழங்கினார். பின்னர் அமைச்சர் முத்துசாமி கூறுகையில், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக பிரிவில், அடுத்த ஒரு மாதத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளின் ஒரு பகுதியாக 40000 மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும். நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில் செட் ஒவ்வொன்றின் விலையும் சுமார் ரூ.100 ஆகும். இதேபோல், பல்வேறு மாவட்டங்களில், அடுத்த ஒரு மாதத்திற்கு நலத்திட்ட உதவி கள் வழங்கப்படும், என்றார்-
விழாவில் கட்சி நிர்வாகிகள் மு.சுப்ரமணியம், வி.சி.நடராஜன், குமரவேலு, முருகேஷ், குமாரசாமி, பி.கே.பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img