தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி முன்னிலையில் துவக்கி வைத்து ஆய்வு செய்தார்.
அரசின் திட்டங்கள் மக்க ளுக்கு எளிதில் கிடைத்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 19.01.24 அன்று தூத்துக் குடி மாநகராட்சி பகுதிகளில் துவங்கியது. இதையொட்டி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
மேலும் அவர், ஆர்.சி. பெத்தானியா நடுநிலைப்பள்ளி, மில்லர்புரம் – செயின்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தெர்மல் கேம்ப் – மாநகராட்சி துவக்கப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்ததாவது:
தூத்துக்குடி மாநகராட்சியின் 4, 11, 12, 13, 14, 20, 21 ஆகிய வார்டுகளுக்கு கந்தசாமிபுரம் ஆர்.சி. பெத்தானி நடுநிலைப் பள்ளியிலும், 34, 35, 51 ஆகிய வார்டுகளுக்கு மில்லர்புரம் செயிண்ட் மேரீஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியி லும், 51 – வது வார்டுக்கு உட்பட்ட காதர்மீரான் நகர், ஊரணி ஒத்த வீடு, முடுக்குகாடு, வீரநாயக்கன்தட்டு, மற்றும் 60- வது வார்டுக்கு உட்பட்ட பகுதி களுக்கு தெர்மல்நகர் கேம்ப்-1ல் அமைந்துள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியிலும் முகாம்கள் நடைபெறுகிறது.
20ம் தேதி (இன்று) 29, 36, 37, 38 ஆகிய வார்டுகளுக்கு சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், 15,16 ஆகிய வார்டுகளுக்கு பி அன்ட் டி காலனி லியோ மழலையர் பள்ளியிலும், 41, 42, 44, 43, 45 ஆகிய வார்டுகளுக்கு காமராஜ் கல்லூரியிலும்.
22.01.2024 திங்கள் கிழமை 5, 6, 9, 10, 23 ஆகிய வார்டுகளுக்கு செயிண்ட் தாமஸ் மெட்ரிக் பள்ளியிலும், 19, 30, 31, 32 வார்டுகளுக்கு டூவிபுரம் 2 வது தெருவில் உள்ள டி.என்.டி.ஏ நடுநிலைப்பள்ளியிலும், 48, 49, 50 வார்டுகளுக்கு கால்டு வெல் காலனி திருக்குடும்ப தமிழ் நடுநிலைப்பள்ளியிலும் முகாம்கள் நடைபெறுகிறது.
23.01.2024 செவ்வாய்கிழமை 24,25 ஆகிய வார்டுகளுக்கு குரூஸ்புரம் செயின்ட் ஜோசப் பள்ளியிலும், 7,8 ஆகிய வார்டுகளுக்கு ஆக்சிலியம் மேல் நிலைப்பள்ளியிலும் 17,18,33 ஆகிய வார்டுகளுக்கு மில்லர்புரம் பி.எம்.சி மேல்நிலைப்பள்ளியிலும், 52,53,54,59 ஆகிய வார்டுகளுக்கு முத்தையாபுரம் எஸ்.கே.எஸ் சங்கரம்மாள் திருமண மண்டபத்திலும் முகாம்கள் நடைபெறுகிறது.
24.01.2024 புதன்கிழமை 40, 46, 47 ஆகிய வார்டுகளுக்கு ரோட்டரி கிளப் இடத்தில் வைத்தும், 27.01.2024 சனிக்கிழமை அன்று 1, 2, 3 ஆகிய வார்டுகளுக்கு போல்பேட்டை தங்கம்மாள் நடுநிலைப்பள்ளியிலும், 55, 56, 57, 58 ஆகிய வார்டுகளுக்கு முத்தையாபுரம் கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் முகாம்கள் நடைபெறுகிறது.
இந்த முகாம்களில் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் மக்களின் கோரிக்கைகளைப் பெற்று பதிவு செய்வார்கள். முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகளால் விரைவில் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும். காலை 10.00 மணி முதல் மாலை 3.00 வரை நடைபெறும் இம்முகாமில் பொதுமக்கள் உரிய ஆவணங்களின் அசல் மற்றும் நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், வட்டாட்சியர் பிரபாகரன், மாநகர பொறியாளர் சரவணன், உதவி ஆணையர் ராமச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், தொழிலாளர் மேம்பாட்டு அணி அமைப்பாளர் முருக இசக்கி, பகுதி செயலாளர் சுரேஷ்குமார், தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அண்ணா துரை, பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா, மாமன்ற உறுப்பினர்கள் மரிய கீதா, சரண்யா ராஜ்குமார், மகேஸ்வரி, ராமு அம்மாள், வட்டச் செயலாளர்கள், மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் வருவாய் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.