fbpx
Homeபிற செய்திகள்எம்.ஜி.எம் மருத்துவமனை சிறுவனுக்கு மறு-மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை

எம்.ஜி.எம் மருத்துவமனை சிறுவனுக்கு மறு-மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை

எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் பல்துறை நிபுணர்களைக் கொண்ட மாற்று அறுவை சிகிச்சை குழு, லக்னோவில் இருந்து வந்த 12 வயதான ஒரு சிறுவனுக்கு சிக்கலான சிறுநீரக மறு-மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டது.


இந்த குழந்தை பிறவியிலேயே வயிற்றுப் பகுதியிலுள்ள முக்கியமான நரம்புகள் மற்றும் நரம்புத் தொடர்புகள் இல்லாமல் பிறந்தது. இது வி4 நரம்பு ஒழுங்கின்மை என வகைப்படுத்தப்படும் அரிதான ஒரு இரத்தக் குழாய் கோளாறு ஆகும்.


இந்த சிறுவனுக்கு முன்னதாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது, ஆனால் மாற்று உறுப்பு செயலிழப்பு ஏற்பட்ட காரணத்தால், மறு-மாற்று அறுவை சிகிச்சை தேவைபட்டது.


இந்நிலையில் இரண்டாவது மாற்று அறுவை சிகிச்சையை எளிதாக்க ஏற்கனவே உள்ள நரம்பிழை பாதை கட்டமைப்புகளை அவை இருந்த விதத்திலேயே பாதுகாத்து பழைய சிறுநீரக மாற்று உறுப்பு கவனமாக அகற்றப்பட்டது. மறு-மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சிறுவன் நன்றாக குணமடைந்து வருகிறார்.


இந்த அறுவை சிகிச்சையை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் தலைவர் டாக்டர் அனில் வைத்யா வழி நடத்தினார். அவருக்கு உதவியாக பல்துறை குழு இருந்தது. இதில் டாக்டர் சுகன்யா கோவிந்தன், குழந்தைகள் சிறுநீரக நோய் நிபுணர் டாக்டர் செந்தில் முத்துராமன், பல்-உள்ளுறுப்பு மற்றும் வயிற்றுப்பகுதி உறுப்பு மாற்றுவதில் மூத்த ஆலோசகர் டாக்டர் ராம் குரஜாலா, தலையீட்டு கதிரியக்கவியலாளர் மற்றும் மயக்கவியல் நிபுணர்கள் டாக்டர் தினேஷ் பாபு மற்றும் டாக்டர் நிவாஷ் சந்திரசேகரன் ஆகி யோர் அடங்குவர்.

படிக்க வேண்டும்

spot_img