fbpx
Homeபிற செய்திகள்சென்னையில் எம்ஜி செலக்ட்டின் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் துவக்கம்

சென்னையில் எம்ஜி செலக்ட்டின் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் துவக்கம்

ஜேஎஸ்டபுள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், எம்ஜி செலக்ட் என்பதன் வழியாக ஆட்டோமோட்டிவ் துறையில் புதுயுக ஆடம்பர சொகுசு வசதியை அறிமுகம் செய்கிறது. இது, சென்னை மாநகரில் நந்தனம் அண்ணா சாலையில் முதல் எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை திறந்திருக்கிறது. ‘ரீஇமேஜினிங் லக்ஸரி’ கோட்பாட்டை செயல்படுத்தும் விதமாக, எம்ஜி செலக்ட் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் புலன் சார்ந்த அனுபவங்களையும், தனிப் பயனாக்கப்பட்ட சேவைகளையும் புகழ்பெற்ற புராடக்ட் களின் தொகுப்பையும் வழங்கும்.

ஜேஎஸ்டபுள்யூ எம்ஜி மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் அனுராக் மெஹ்ரோத்ரா பேசுகையில், “இந்தியாவில் சமீப ஆண்டுகளில் லக்ஸரி கார்களை வாங்கும் போக்கு வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. எம்ஜி செலக்ட் இந்திய சொகுசு கார்கள் பிரிவையும், சூழலையும் மறுவரையறை செய்கிறது. தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட தயாரிப்புகளையும் மற்றும் பிரத்யேக அனுபவங்களையும் வழங்குவதன் மூலம் இந்த இலக்கு எட்டப்படும்“ என்றார். எம்ஜி செலக்ட் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் வியத்தகு கனவுலகமாகத் திகழ்கிறது.

இதில் அழகான சிற்பக் கலைப் படைப்பாக மைய இடத்தில் கார் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது, கார் வாங்குவோரை மெய்மறக்கச் செய்கிறது. எம்ஜி செலக்ட் சென்னை டீலர் பிரின்சிபல் வினய் மோகன் கூறுகையில், “சென்னையிலுள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு ஆட் டோமோட்டிவ் துறையின் ஆடம்பரம் மற்றும் சொகுசு வசதி என்ன என்பதை மறுவரையறை செய்வ தற்கு வழக்கமான ஷோரூம் அனுபவத்திலிருந்து இந்த மையம் மாறுபட்டு தனிச்சிறப்பானதாக திகழ்கிறது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img