fbpx
Homeபிற செய்திகள்எம்.ஜி மோட்டார் இந்தியா புதிய மாடல்களை அறிமுகம் செய்து அசத்தல்

எம்.ஜி மோட்டார் இந்தியா புதிய மாடல்களை அறிமுகம் செய்து அசத்தல்

எம்.ஜி மோட்டார் அறிமுகம் செய்யும் “எக்சைட் ப்ரோ”-டூயல் பேன் பனோரமிக் ஸ்கை ரூப்புடன், கவர்ந்திழுக்கக் கூடிய ரூ.19.98 லட்சம் என்னும் விலையில், அதன் முன்னணி மின்சார வாகனமான MG ZS-இன் புதிய மாறு பட்ட வடிவமாக அமைந்துள்ளது.

அத்துடன், எம்.ஜி மோட்டார் இந்தியா விரைவாக சார்ஜ் செய்யும் விருப்பத்துடன் கூடிய வகையில் எக்சைட் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் என்னும் இரண்டு மாறு பட்ட வடிவங்களில் MG காமெட்டை அறிமுகப்படுத்துகிறது.

ஸ்மார்ட் மின்சார வாகனமான MG காமெட்- இன் விலை வரம்பு ரூ.6.98 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. எதிர்காலம் சார்ந்து வடிவமைக்கப்பட்ட MG ZS EV ஆனது நல்ல ஆன்-ரோட் தோற்றம், ஓட்டுவதற்கான வசதிகளை, உள்ளடக்கியுள்ளது.

இவை எக்சிகியூட்டிவ், எக்சைட் ப்ரோ, எக்ஸ்க்ளூசிவ் ப்ளஸ் மற்றும் எஸ்சென்ஸ், ஆகிய நான்கு வகைகளில் கிடைக்கும். இதன் ஆரம்ப விலை ரூ.18.98 லட்சம்.

மேலும் சாவி இல்லாமல் காரை இயக்கி ஓட்ட உதவும் டிஜிட்டல் சாவி பூட்டுதல் மற்றும் திறத்தல் வசதியினை வழங்குகிறது. அத்துடன் இது வாகனத்தை இயக்கும் அனுபவம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் ADAS நிலை 2 உடன் வருகிறது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள MG காமெட் வகைகளான எக்சைட் FC மற்றும் எக்ஸ்க்ளூசிவ் FC இரண்டும் விரைவாக சார்ஜ் ஏற்றும் விருப்பத் தேர்வுகளுடன் கவர்ந்திழுக்கக்கூடிய வகையில் முறையே 8.23 லட்சம் மற்றும் 9.13 லட்சம் விலையில் (எக்ஸ் ஷோரூம்) கிடைக்கின்றன.

படிக்க வேண்டும்

spot_img