fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையத்தில் தண்ணீர் மேளா - 500 விவசாயிகள் பங்கேற்பு

மேட்டுப்பாளையத்தில் தண்ணீர் மேளா – 500 விவசாயிகள் பங்கேற்பு

கோவை மேட்டுப்பாளையத்தில் தாயனூரில் கூடு தொண்டு நிறுவனம் ஐடிசி தேக்கம்பட்டி காரமடை கிளை நிறுவனமும் இணைந்து ஒளிமயமான எதிர் காலம் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை திட்டம் தண்ணீர் மேளா2024 கொண்டாடப் பட்டது

காரமடை அருகே தேக்கம் பட்டியில் உள்ள ஐடிசி காகிதஆலை நிறுவனமும் கூடு தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து தண்ணீர் மேளா2024 கொண்டாடப்பட்டது. தன்னார்வ தொண்டு நிறுவனம் செயலாளர் டாக்டர் கதிரேசன் வரவேற்று பேசினார்.

விழாவில் ஐடிசி நிறுவனத்துடன் கூடு தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து இணைந்து நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் காலம்பாளையம் செம்பரம்பாளையம் வெள்ளியங்காடு மருதூர் சோளம்பாளையம் தேக்கம்பட்டி நெல்லித்துறை ஆகிய 6 ஊராட்சிகளை நீர் மேலாண்மை மேம்பாடு செய்ய குளம் , குட்டைகளை தூர் எடுத்து தடுப்பணைகள் கட்டியும் மரங்கள் சவுக்கு மரங்கள் நட்டு வளர்க்கும் பணிகளை செய்து வருகின்றன.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தொழில்நுட்ப உதவி பெற்று விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்கின்றனர். சிறந்த நீர் மேலாண்மை விவசாயிகளுக்கு வழங்குவதில் கூடு தன்னார்வ தொண்டு நிறுவனம் சிறந்து விளங்குகிறது.

ஒளிமயமான எதிர்காலம் ஒருங் கிணைந்த நீர் மேலாண்மை திட்டம் மூலம் இப்பகுதி மக் கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை விவசாயிகளுக்கு செய்து வருகின்றனர் ஐடிசி நிறுவனம் மற்றும் கூடு தொண்டு நிறுவனம் பொதுமக்களின் பங்கு தொகையுடன் குளம் குட் டைகளை தூர்வாரி நீர் ஆதாரங்களை சேமித்து வைத்து விவசாயிகளுக்கும் மற்றும் குடிநீருக்கும் தேவையான நிலத் தடி நீர்மட்டம் உயர்த்தப்பட்டு குளம் குட்டைகள் தூர்வா ரப்பட்டு நீர் தேக்கி வைக்கப்படுகிறது.

இதனால் இப்பகுதியில் விவசாயம் செழிப்படைந்துள்ளது. இதற்கு கிராமப் பகுதி மக்கள் விவசாயிகள் நிறுவனங்களுக்கு மிகுந்த பாராட்டினை தெரிவித் தனர். நேற்று நடைபெற்ற விழாவில் கூடு தன்னார்வ தொண்டு நிறுவன செயலர் டாக்டர் எஸ். கதிரேசன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக ஐடிசி நிறுவனத்தின் கிளை தலைமை காரமடை வெங்கட் ராவ் சிறப்புரை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து ஐடிசி ஹெச் ஆர் தலைமை மகேந்திர பாபு விவசாயிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய அரசு ஜல் சக்தி துறை விஞ்ஞானி தயா மலர், தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழக ஏஇசி ரிசர்ச் டீன் டாக்டர் ரவி ராஜ், அவிநாசி லிங்கம் கேவிகே காரமடை மூத்த விஞ்ஞானி டாக்டர் குமார வடிவேலு, பொறியாளர் லீலா, வேளாண்மை உதவி இயக்குநர் பாக்கியலட்சுமி, பவானி சர்க் கிள் வாட்டர் ரிசோர்ஸ் டிபார்ட்மென்ட் ரமேஷ், பஞ்சாயத்து தலைவர்கள் ரவிச்சந்திரன், தோலம்பாளையம் துணைத் தலைவர் ரங்கராஜ், காளம்பாளையம் தலைவர் பொன்னுசாமி, தலைவர் செல்வி நிர்மலா, தொப்பம்பாளையம் உள்பட அப்பகுதியில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற் பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவில் வேளாண் உபகரணங்கள் வழங்கும் நிகழ் வில் செங்கலூர் மலைவாழ் மக்கள் குழுவிற்கு பவர் லீடர் வழங்கப்பட்டது. காளியப்பனுர் நீர்வாடி பகுதி குழுவிற்கு ரூ.65 ஆயிரம் காசோலையும் மற்றும் விவசாயிகள் முன்னேற்றத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

சிறந்த விவசாயிகளுக்காக காலம் பாளையம் சிவலிங்கம், தோலம்பாளையம் பழனிச்சாமி, மருதூர் நேரு, தேக்கம்பட்டி சிவகுமார், வெள்ளியங்காடு அனிதா ஆகியோருக்கு பரிசும் கேடயம் வழங்கப்பட்டது. காவேரி நீர்வடி பகுதி பயனாளிகள் குழு, செல்வா நகர் நீர்வடி பகுதி பயனாளிகள் குழு, குழு ஆகியவற்றுக்கு ஊக்கியனூர் மலைவாழ் மக்கள் பயனாளிகள் குழு ஆகிய வற்றுக்கு சிறப்பு பரிசும் ஊக்கத் தையும் வழங்கப்பட்டது.

விழாவில் விழாவில் கூடு தன்னார்வ தொண்டு நிறுவன துணை இணை செயலர் சங்கீதா பேகம் மற்றும் கூடு தன்னார்வத் தண்ணீர் நிறுவன அலுவலர்கள் உறுப்பினர்கள் நிகழ்ச்சி ஒருங் கிணைப்பாளர் ஐடிசி மற்றும் கூடு யுவராஜ் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img