கர்நாடக மாநிலம் கூர்க் ஊரில் அக்னி வீரன் சிலம்பம் அகாடமி சார்பில் சர்வதேச அளவிலான சுருள்வாள் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் 6 நாடுகள் பங்கு கொண்டன.
தமிழ்நாட்டைச் சார்ந்த 40 வீரர்கள் பங்கு கொண்டதில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டத்திற்கு உட்பட்ட நேஷனல் மெட்ரிக் மேல்நிலை பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீவர்ஷினி 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டு முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளாள்.
வெற்றி வாகை சூடிய மாண வியையும் பயிற்சி அளித்த ஆசிரியர் வி.முத்தையாமுருகனையும் நிர்வாகத்தினர் முதல்வர் மற்றும் இருபால் ஆசி ரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.