fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையை கடந்து பாக்கு தோப்புக்குள் சென்ற ஒற்றை ஆண் காட்டு யானை

மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையை கடந்து பாக்கு தோப்புக்குள் சென்ற ஒற்றை ஆண் காட்டு யானை

தமிழ்நாடு – கேரளா – கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே காட்டு யானைகள் நட மாட்டம் அதிக அளவில் உள்ளது.

மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் கூட்டம் அதிக அளவில் உள்ளது குறிப்பாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் சாலை கடக்கும் யானைகள் விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

தற்போது பொங்கல் விடுமுறை என்பதால் சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்திற்கு மேட்டுப்பாளையம் வழியாக அதிக அளவில் சுற்றுலா வாக னங்கள் சென்று வருகின்றது.

இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் காட்டை விட்டு வெளியே வந்த ஓற்றை காட்டு யானை ஊட்டி சாலை கல்லார் ரயில்வே கேட்டு அருகே சாலையை கடந்து பாக்கு தோப்புக்குள் செல்லும் வீடியோ அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது செல்போனில் எடுத்தனர் தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img