மேட்டுப்பாளையம் அடுத்துள்ள குருந்தமலை அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூசத்தன்று தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் நடப்பாண்டில் பழைய தேருக்கு மாற்றாக புதிய திருத்தேர் உருவாக்கப்பட்டு பெருந்திருவிழா கடந்த 19 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து 23 ஆம் தேதியன்று வள்ளி மலையில் அம்மன் அழைப்பு, 24 ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம்,யானை வாகன உற்சவம் உள்ளிட்டவையும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார். கோவிலை சுற்றியுள்ள ஏழு கிராமங்கள் மற்றும் இதர பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.