மேட்டுப்பாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 329 மனுக்கள் பெறப்பட்டுள்ளது இந்த மனுக்களை பரிசீலனை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் நேற்று தொடங்கியது. முதல் கட்ட மாக நகராட்சிக்கு உட்பட்ட 6, 7, 8, 9, 19, 20, ஆகிய வார்டுகளில் உள்ள பொது மக்களின் குறைகளை
மனுக்களாக பெறப்பட்டது
முகாமில் 13 அரசு துறை அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்தனர். மேட்டுப்பாளையம் தம்பான் கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் இளங்கோ,
மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சந்திரன்,தனி வட்டாட்சியர் ரங்கராஜன், மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் அஷ்ரப் அலி, துணைத் தலைவர் அருள்வடிவு முனுசாமி, மற்றும் நகராட்சி ஆணையர் அமுதா நகர மன்ற உறுப்பினர்கள் புவனேஸ்வரி காளியம்மாள் சமீனா பேகம் முகமது யாசின், நகராட்சி உதிவியாளர் ஜெயராமன், ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
இந்த முகாமில் பெறப்பட்ட 329 மனுக்களை பரிசீலனை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு குறைகளை தீர்த்து வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.